நான் பதிவு எழுதறதைப் பாத்துட்டு நிறைய நண்பர்கள்...கலக்கறியே எப்படிடா மச்சான்...தமிழ் டைப் பண்றன்னு ஆச்சரியமா கேக்கறாங்க....இன்னும் சில பேர் எனக்கும் ஆசைதான் வலைப்பதிவுல எழுதனும்னு...ஆனா தமிழ்ல டைப் பண்றத நினைச்சாலே அலர்ஜி ஆயிடுது மச்சினு சொல்றாங்க....
ஆனா உண்மைல தமிழ்ல டைப் பண்றது ரொம்ப ஈசியான விசயம்தான்னு உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும் இல்லீங்களா..அப்படி தெரியாதவங்க எப்படி அது சுலபம்ங்கறத பாக்கலாம் வாங்க.....
நான் தமிழ் டைப் பண்றதுக்காக....கூகுள்ல டீஃபால்ட்டா கொடுத்திருக்கற டூல்கிட் எதையும் பயன்படுத்தறது இல்லங்க...நான் ekalappai அப்படிங்கற தமிழ் மென்பொருளதான் அதுக்கு பயன்படுத்தறேன்...இதோட சிறப்பு என்னன்னா...நாம இத நம்ம கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணிட்டா போதும்...அப்புறம்...நாம நோட்பேட்ல கூட தமிழ்ல சுலபமா டைப் பண்ணலாம்..அதை சேமிச்சு வெச்சிக்கலாம்...அதப்பத்தி கொஞ்சம் பாப்போம் வாங்க.
1. முதல்ல http://thamizha.com/ekalappai-anjal இந்த லிங்க்ல இருந்து இ-கலப்பை சாஃப்ட்வேர டவுன்லோடு பண்ணி உங்க கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணுங்க...
2. இன்ஸ்டாலேசன் முடிஞ்சதும் மறக்காம Start Keyman immediately, Start Keyman with Windows அப்படிங்கற ரெண்டு செக் பாக்ஸ்களும் செலக்ட் ஆயிருக்கான்னு செக் பண்ணிக்கங்க...அப்புறம் Finish பட்டனை பிரஸ் பண்ணுங்க.
3. அப்புறம் உங்க கம்ப்யூட்டர ரீஸ்டார்ட் பண்ணுங்க...
4. அவ்லோதாங்க...இப்ப போய் உங்க சிஸ்டம் ட்ரேவ பாத்தீங்கன்னா...கீழ இருக்கற படத்துல இருக்கற மாதிரி K அப்படின்னு போட்ட ஒரு ஐகான் வந்திருக்கும்.
5. இப்ப நோட்பேட ஓப்பன் பண்ணிக்கங்க....
6. கீபோர்ட்ல Alt + 2 பிரஸ் பண்ணுங்க...
7. இப்ப சிஸ்டம் ட்ரே பாத்தீங்கன்னா...K அப்படின்னு இருந்த இடம் 'அ' அப்படின்னு மாறி இருக்கும்..கீழ இருக்கற படத்துல இருக்கற மாதிரி...
8. அவ்லோதான் இப்ப உங்க நோட்பேட்ல எதாவது டைப் பண்ணீங்கன்னா அது தமிழ்லதான் டைப் ஆகும்...
9. தமிழ் டைப் பண்றதும் ரொம்ப ஈசிதாங்க...மொபைல்ல டைப் பண்ற மாதிரியே டைப் பண்ணாலே போதும்...ஆனா கொஞ்சமே கொஞ்சம் வார்த்தை மட்டும் நியாபகம் வெச்சிக்க வேண்டி வரும்......
சில உதாரணங்கள் காமிச்சிருக்கேன் எப்படி டைப் பண்றதுன்னு பாருங்க...
நான் - waan
ஸ்ரீ - sr
அண்ணா - aNNaa
தமிழ் - thamiz
அன்னம் - annam
லைலா - lailaa
மஞ்சுளா - manjsuLaa
கி - ki
கீ - kii
ழ - za
ஸ் - S
ஷ் - sh
ச் - s
ச - sa
ஞா - njaa
அங்கு - angku
வேறு - veeRu
வெற்றி - veRRi
ஃ - q
முடிஞ்சவரை சிரமமான எழுத்துக்களை மட்டும் இதுல கொடுத்திருக்கேன்...எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க...
நீங்கள் ஏற்கனவே வேறு விதமா டைப் பண்ணிட்டு இருந்தீங்கன்னா..இது உங்களுக்கு சிரமமா இருக்கற மாதிரி ஆரம்பத்துல தோணலாம்..ஆனா இது ரொம்ப சுலபமான வழிங்க.....அதுவும் இல்லாம...நாம டூல்கிட்ல எல்லாரும் நார்மலாவே சந்திக்கிற ஒரு பிரச்சினை..நாம ஒன்னு நினைச்சு டைப் பண்ணிருப்போம்..ஆனா அது வேற எழுத்தா மாறி...எழுத்துப்பிழையா வந்திருக்கும்......
சரி உங்களோட பதிவ டைப் பண்ணி முடிச்சிட்டீங்களா...இப்பதான் நீங்க அதை சேமிச்சு வைக்கிறதுல கொஞ்சம் கவனமா இருக்கனும்....
சேவ் பன்னும் போது எதாவது ஃபைல் நேம் நீங்க குடுப்பீங்க இல்லியா அதுக்கு கீழ Encoding அப்படின்னு ஒரு ஆப்சன் இருக்கும்..அது டீஃபால்ட்டா...."Ansi" அப்படின்னு இருக்கும்....அதை அப்படியே சேவ் பண்ணிங்கன்னா..உங்களோட இவ்வளவு நேர உழைப்பும் வீணாப்போயிடும்....மறக்காம அதை கிளிக் பண்ணி அதுல "UTF-8" அப்படின்னு இருக்கற ஆப்சனை செலக்ட் பண்ணிக்கிட்டு அப்புறம் சேவ் பண்ணுங்க...
அவ்லோதாங்க நோட்பேட்ல இப்ப நீங்க டைப் பண்ணி வெச்சிருக்கற பதிவ...அப்படியே காபி பண்ணி பிளாக்கர்ல பேஸ்ட் பண்ணிட்டு...இடையில இடையில உங்களுக்கு தேவையான படத்தை இணைச்சு...போஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்....
நான் அடிக்கடி தமிழ் English ரெண்டும் கலந்து டைப் பண்ற ஆள் அப்படின்னு நீங்க சொன்னீங்கன்னா.....அதுவும் ரொம்ப சுலபந்தாங்க...
நீங்க தமிழ் டைப் பண்ணிட்டு ஒரு முறை கீ போர்ட்ல alt + 2 பிரஸ் பண்ணுங்க... உங்க சிஸ்டம் ட்ரேல "K" அப்படின்னு மாறி இருக்கும்..அப்புறம் ஆங்கிலத்துல டைப் பண்ண வேண்டியது எல்லாம் முடிச்சுட்டு மறுபடியும் alt + 2 பிரஸ் பண்ணிங்கன்னா தமிழுக்கு மாறிடும்....
அப்புறம் நீங்க டைப் பண்ணதுல ஸ்பேஸ், பேரகிராஃப் இதுலல்லாம் எந்த குழப்பமும் வராம இருக்கனும்னா நோட்பேட்ல இருந்து எடுத்து பேஸ்ட் பண்றதுக்கு முன்னாடி நோட்பேட்ல Format கிளிக் பண்ணி அதுல இருக்கற Word Wrap அப்படிங்கற ஆப்சனை ரெண்டு முறை கிளிக் பண்ணுங்க...அவ்லோதான்..இப்ப நீங்க அப்படியே செலக்ட்ஆல் கொடுத்து காபி பண்ணி உங்க பிளாக்கர் நியூ போஸ்ட்ல பேஸ்ட் பண்ணுங்க....எந்த பிரச்சினையும் இல்லாம பேஸ்ட் ஆயிருக்கும்.
இதை நீங்க நோட்பேட்ல மட்டும் இல்லீங்க..எங்க வேணாலும் யூஸ் பண்ணலாம்...அதாவது நீங்க மெயில் பண்ணும்போது கூட...alt + 2 கொடுத்துட்டு...தமிழ்லயே டைப் பண்ணி உங்க நண்பருக்கு மெயில் அனுப்பலாம்.....
நோட்பேட்ல இருந்து காபி பண்ணி பிளாக்கர்ல பேஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் எதாவது மாற்றம் செய்யனும்னு நினைச்சீங்கன்னா...நேரடியா அங்கயே...alt + 2 கொடுத்து...தமிழ்ல டைப் பண்ணிடலாம்....
நான் சொல்லி இருக்கறதுல எதாவது புரியலைன்னா...கேளுங்க...நான் விளக்கம் சொல்றேங்க....
இனி என்ன கவலையேபடாம தமிழ்ல எளிதா டைப் பண்ணி உங்க போஸ்ட போடுங்க..அங்கயும் வந்து பின்னூட்டம் போட்டுடுவோம். இப்ப நீங்க உங்க கருத்தையும் ஒட்டையும் மறக்காம போடுங்க பாஸ்...






இதை விட இலகுவாக Microsoft இன் தமிழ் மென்பொருளை உபயோகித்து தட்டச்சலாமே
ReplyDeletehttp://specials.msn.co.in/ilit/TamilPreInstall.aspx
நிச்சயம் அதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்...தகவலுக்கு நன்றி...
ReplyDeleteதகவலுக்கு நன்றி..
ReplyDeleteநான் NHM writer யூஸ் பண்ணுகிறேன். சௌகரியமா இருக்கு. நாலு நாள்ல கீ போர்டு எழுத்துக்கள் பரிச்சயமாகிவிடும்.
ReplyDeleteவாவ்.. ரொம்ப நல்ல தகவல்.. ட்ரை பண்றேன்..
ReplyDeleteநன்றி ரமேஷ்.. :-)
nice
ReplyDeleteதகவலுக்கு நன்றி..
ReplyDelete:-)
நண்பா! அழகி. http://www.azhagi.com/ இதையும் பயன்படுத்தலாம். இது மிகவும் எளிது. 'மற்ற' என டைப் அடிக்க matra என அடித்தால் போதும். ஸ்ரீ என அடிக்க வெறுமனே sri என்று அடித்தால் போதும். நான் அதை தான் பயன்படுத்துகிறேன். நண்பர்களுக்கும் தெரிவிக்கவும். இது இலவசமாக மேலே இருக்கும் வலைதளத்தில் கிடைக்கிறது.
ReplyDeleteவருகைக்கு நன்றி ரமேஷ்...
ReplyDeleteநன்றிங்க சித்ரா...
வருகைக்கு நன்றி திரு கந்தசாமி அவர்களே..அதையும் பயன்படுத்திப் பார்க்கிறேங்க..தகவலுக்கு நன்றிங்க..
வருகைக்கு நன்றி ஆனந்தி...ஆமாம் பயன்படுத்திப் பாருங்க.. ரொம்ப சுலபமா இருக்கு...
வருகைக்கு நன்றி யாதவன்.
முதல் முறையாக பின்னூட்டமிட்டிருப்பதற்கு நன்றி பிரபாதாமு.
வருகைக்கு நன்றி "என்னது நானு யாரா?". அதையும் பயன்படுத்தி பாக்கறேங்க..தகவலுக்கு நன்றிங்க..
மிகவும் நன்றி .பயனுள்ள தகவல்
ReplyDeleteபயனுள்ல பகிர்வுங்க .... புதியவர்கலுக்கு பயன்படும்.
ReplyDeleteநான் nhm தான் பயன்படுத்துகிறேன். இதுவும் மிக எளிமைதான்.
தொடர்க உங்க தொண்டு.
வருகைக்கு நன்றி JOE2005.
ReplyDeleteவருகைக்கு நன்றி வாசன்..இதனையோ அல்லது பின்னூட்டங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மென்பொருட்களையோ பயன்படுத்திப் பாருங்கள்..நீங்கள் ஆன்லைனில் இல்லாத போதும்...அது உதவியாய் இருக்கும்...
வருகைக்கு நன்றி கருணாகரசு...
எனக்கென்னமோ nhm தான் சிறந்தது என்று நினைக்கிறேன். காரணம் அதை ஆன்லைன் ஆஃப்லைன் எல்லா சாஃப்ட்வேர்களிலும் பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் யுனிகோட் மட்டுமில்லாமல், tscii, tab, tam, bamini, shrilipi, vanavil போன்ற எல்லா வித ஃபோண்ட்களையும் பயன்படுத்தலாம். மேலும் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி போன்ற பல மொழிகளிலும் எழுதாலாம்.
ReplyDeleteஇதிலும் நீங்கள் சொன்ன வசதிகள் (மற்ற மொழிகளில் எழுதுவதைத் தவிர) எல்லாம் இருக்கின்றன நண்பரே...எனினும் இது நான் மென்பொருள் பரிந்துரைக்காக எழுதிய பதிவு அல்ல....இது போல் இருப்பதே தெரியாமல் தடுமாறும் நபர்களுக்கு..நான் பயன்படுத்துவதைக் கூறினேன்....மற்றபடி..இங்கே பின்னூட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற மென்பொருட்களையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்...தகவலுக்கு நன்றி நண்பரே....
ReplyDeleteஅருமை மிக நன்று this is very useful / tips wonder full ramesh
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க முத்துவேல்
ReplyDeletenhm தான் சிறந்தது. அனைத்து அப்ளிகேஷன்களிலும் செயல்படுகிறது.
ReplyDeleteஎன்ஹெச்எம் தான் சிறந்தது.அனைத்து அப்ளிகேஷன்களிலும் செயல்படுகிறது.
ReplyDeleteநிச்சயம் பயன்படுத்திப் பார்க்கிறேன்..தகவலுக்கு நன்றி..
ReplyDeleteஹாய் ரமேஷ் அண்ணா..
ReplyDeleteஉங்களோட இந்த எளிதான டிப்ஸ்களுக்கு மிகவும் நன்றி.
சில நாள்களுக்கு முன்பு குழந்தைக்காக உதவி கேட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அந்த செய்தி எனக்கு இமெயிலில் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரில் இருந்து எனக்கு Forward செய்யப் பட்டு வந்தது.
நானும் குழந்தை என்பதால் சற்றும் யோசிக்காமல் அதுபோன்று ஒரு பதிவினை எழுதினேன்.
அது உண்மையாக இல்லை என்பது குறித்து எனக்கு மிகுந்த வருத்தம்....
இதுபோன்ற ஒரு தவறான பதிவினை அளித்தமைக்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்....
இனி எந்த விசயமாக இருந்தாலும் முழுக்க ஆராய்ந்த பிறகே நம்புவதாக தீர்மானம்....
பதிவினை எழுதிவிட்டு சொந்த ஊருக்கு போய்விட்டு வந்து பார்த்தால் இவ்வளவு நடந்துருக்கு. யப்பா..எத்தன் நம்புறதுன்னு தெரியல போங்க...
வருகைக்கு நன்றி பூபாலன்.
ReplyDeleteஆம் பூபாலன் உதவி கேட்டாலும் உண்மையா என்று உறுதிசெய்து கொண்டு உதவுவதுதான் நல்லது....
ரொம்ப எளிமையா பயனுள்ள தகவல்களை சொல்லியிருக்கீங்க தம்பி....எழுதும் விதத்தில் ஒரு அன்னியோன்யம் தெரிகிறது.....வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க தேவா...
ReplyDeleteஅருமையான தேவையான பதிவு பாஸ்,
ReplyDeleteதமிழ் பான்ட் பற்றிய உங்கள் பதிவு பயனுள்ளது.உபயோகித்துப் பார்க்கிறேன். பின்னூட்டங்ளிலும் நல்ல தகவல்களைப் பதிவர்கள் தந்திருக்கின்றார்கள்.அனைவருக்கும் நன்றி
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு நன்றி நான் ஏற்கனவே "அழகி" உபயோகித்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது இதையும் பயன்படுத்த எனக்கு ஆவலாக உள்ளது ஆகவே இதும் உபயோகித்துவிட்டு பின் உங்களுக்கு என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.
ReplyDeleteமேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
அறிந்து கொள்ள www.yourastrology.co.in
என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.
where did u download your blogger page.. so nice pls say.. this page only i want
ReplyDeleteநல்ல பதிவு அன்பரே. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteமலேசியாவில் இருந்து...