உலகத்துலயே பிடிச்ச விசயங்கள்னு ஒரு லிஸ்ட் எடுத்தா..அதுல நம்ம பேரை நாமே வித விதமா எழுதிப்பாக்கறதும் கண்டிப்பா வரும் இல்லையா...நான் இயல்பாவே சின்னதா எதாவது மூட் அவுட் ஆனேன்னா..என்னோட பேற நானே விதவிதமா எழுதிப்பாப்பேன்...அப்படி எழுதும்போது....என்னோட மைண்ட் சேஞ்ச் ஆகி...சந்தோசம் வர்றதை பல தடவை உணர்ந்திருக்கேன்...அதனாலயே எனக்கு இந்தப் போட்டி ரொம்ப பிடிச்சிருந்தது..அதுனால நானும் கலந்துக்கிட்டேன்...
இன்டர்னெட்ல ஃபாண்ட் டிசைன்ஸ்லாம் கொஞ்சம் பாத்துட்டு போனேன்..ஆனா அந்த நிமிசத்துல என்ன தோனுதோ அதான்னு நினைச்சிட்டு இருந்தேன்...அதுக்காக க்லோ பென்லாம் வாங்கி ரெடியா போனேன்...எரேசர்லாம் வாங்கலை..நாங்கள்ளாம் ஸ்கூல் படிக்கற காலத்துலயே அதெல்லாம்..வாங்கினதில்லை..இப்ப வாங்கறதான்னு அவமானமா நினைச்சு விட்டுட்டேன்..
அவங்க கொடுத்த சாட்ல பாதி பேர எழுதிட்டு பார்த்தா..மீதி இருக்கற இடம் என் பேர எழுத பத்தாது..அதனால மீதி இருக்கற லட்டர்ஸ அளவு குறைக்க வேண்டிய கட்டாயத்துல இருந்தேன்...ஒரு வழியா பேரை முழுசா..பென்சில்ல எழுதிட்டு....
க்லோ பென்ல கலர் குடுத்துட்டு இருந்தேன்..பாதி கலர் கொடுத்திருப்பேன்..அந்த பென்னும் என் கழுத்த அறுத்துடுச்சு...பாதிலயே தீந்து போச்சு..அப்புறம் வேற வழி இல்லாம...வேற கலர் பேனால மீதிய எழுதி முடிச்சு...ஒரு வழியா ஒப்பேத்திட்டேன்...காரித்துப்பப் போறாங்கன்னு நினைச்சுக்கிட்டு..என்னடா ஆர்வத்தோட கலந்துக்கிட்டு இப்படி கேவலமா பண்ணிட்டமேன்னு வருத்தமாதான் இருந்தது...சோகத்தோட அதைக் கொடுத்திட்டு வந்திட்டேன்..
அடுத்த நாள் ஆபிசுக்கு வந்து பாத்தா..இன்ப அதிர்ச்சி...என்னோட பெயர் லோகோவுக்கு மூன்றாம் பரிசு கொடுத்திருந்தாங்க...நம்ம பேர நாமே எழுதி அதை ஒருத்தர் ரெகக்னைஸ் பண்ணி பரிசுல்லாம் தர்ராங்கன்னா..அது சந்தோசமான விசயம்தான்..இல்லையா...என்னோட சந்தோசத்துக்கு அளவே இல்லைங்க....அதான் உடனே உங்ககிட்ட பகிர்ந்துக்கலாமேன்னு...எழுதிட்டேன்...நான் எழுதிய பெயர் லோகோ..உங்களுக்காக பார்த்து ரசி(ரி)ங்க
வாழ்த்துக்கள்! :-)
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா..என்னோட எல்லா பதிவுக்குமே வந்து கருத்து சொல்லி ஊக்கம் கொடுக்கறீங்க...ரொம்ப சந்தோசமா இருக்குங்க சித்ரா..அதுக்காக ஒரு ஸ்பெசல் நன்றிங்க...
ReplyDeleteம்ம்ம் அந்த A தான் எனக்கு பிடிச்சிருக்கு (கொம்பு வச்சிருக்கீங்ககள்ள அதான்)
ReplyDeleteபரிசுலாம் வாங்கியிருக்கீங்க :) ட்ரீட் எப்ப ?
ஹஹ்ஹா..என்னடா A கொஞ்சம் குட்டையா போயிடுச்சேன்னு..அதுக்கு கொம்பு போட்டேன்...ஆனா..கொம்பு வெச்சப்புறம்..எனக்கும் புடிச்சிருந்தது...நன்றி யோகேஷ்..நேர்ல மீட் பண்ண சான்ஸ் கிடைக்கும்போது மறக்காம வாங்கிடுங்க ட்ரீட்ட...
ReplyDeleteஅட நல்லாயிருக்குங்க
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சிவசங்கர்...
ReplyDeleteரொம்ப நன்றிங்க வேலு...சந்தோசமா இருக்கு..உங்க பாராட்டு..
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்குங்க பாராட்டுக்கள்
ReplyDeleteCreative aa irukku! Congrats!
ReplyDeleteரொம்ப நன்றிங்க ஆவி..
ReplyDeleteNice.
ReplyDeleteவணக்கம் ரமேஷ்
ReplyDeleteபென்சில்லே வர்ணம் தீட்டி இருந்தாள் உங்களுக்கு தான் முதல் பரிசு கிடைத்திருக்கும்
http://marumlogam.blogspot.com
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..
ReplyDeleteமை தீர்ந்தாலும் விடாம எழுதி... ஜெயிச்சிட்டீங்க..
வாழ்த்துக்கள்.. :-))
ஹ ஹ..ஆமாங்க ஆனந்தி..அதுல எனக்கு சர்ப்ரைஸே அதுதான்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..
ReplyDelete///ஹ ஹ..ஆமாங்க ஆனந்தி..அதுல எனக்கு சர்ப்ரைஸே அதுதான்...///
ReplyDeleteஎதிர்பார்க்காமல் கிடைக்கும் சந்தோசத்துக்கு எப்பவும் மதிப்பு அதிகம்.. :-))
ஆமாம் அப்படி கிடைக்கிற சந்தோசம் அது எவ்வளவு சின்னதா இருந்தாலும் மனசுல பசுமையா பதிஞ்சிடுது இல்லீங்களா..
ReplyDeleteஆமாங்க.... கரெக்ட் தான்.. :-))
ReplyDelete"எதிர்பார்த்து வரும் ஏமாற்றங்களை விட.....
எதிர்பார்க்காது கிடைக்கும் சந்தோசங்கள் பெரிது"
இது தான் நா நினைக்கறது..
சாரி ரொம்ப போர் அடிச்சுட்டேன்.. போல.. :D
அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லீங்க ஆனந்தி...இங்க வந்து நீங்க தொடர் பின்னூட்டம் போடறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்...
ReplyDelete@ஆனந்தி
ReplyDeleteசகோ என்ன நம்ம கட பக்கம் ஆளயே காணோம் :)
@யோகேஷ்
ReplyDeleteஇதோ வரேன்... கொஞ்சம் வேலை.. :-))
ரொம்ப தேங்க்ஸ்.. ரமேஷ்..
ReplyDeleteமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்... :-))
@ஆனந்தி
ReplyDeleteஆகட்டும் :)
கண்டிப்பா..அடுத்த பதிவும் போட்டாச்சு...நேரம் இருக்கும் போது பாருங்க...
ReplyDeleteஎஸ், கண்டிப்பா பார்க்கிறேன் :-))
ReplyDeleteஉங்கள் logo creativity மிக அருமை....நல்லா தான் டிசைன் பண்ணி இருக்கீங்க ரமேஷ்
ReplyDeleteஹ ஹ ஹ..ரொம்ப நன்றி விஜய்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ரமெஷ்
ReplyDeleteலோகோ நல்லா இருக்குது, பரிசு கண்டிப்பா கொடுக்கலாம்