Sunday, August 22, 2010

பெண்ணின் மூக்கை அறுத்த மூடர்கள்

ஆப்கனில் ஆயிஷா என்ற பெண்ணையும் அவளது தங்கையையும் அவர்களது தந்தையே அடிமை போல இன்னொரு உறவினரிடம் ஒப்படைத்து இருக்கிறார். 12 வயதில் ஆயிஷா பூப்பெய்தியதும் அந்த குடும்பத்தில் ஒருவனுக்கே அவளை கட்டிக் கொடுத்திருக்கின்றனர். அவன் செய்த கொடுமைகளைத் தாளாமல் வீட்டை விட்டு தப்பி வந்தாள். தப்பி வந்தது குற்றம் என அவளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் நம் (கலாச்சார) காவல் நண்பர்கள்.

அவளை அவரது தந்தை மீட்டு அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்றிருக்கிறார்...சிறிது நேரத்தில் அங்கு வந்த அவளது கணவனும் அவனது உறவினர்களும் செய்த செயல்தான் கொடுமையின் உச்சம்...கொஞ்சமும் ஈவு இறக்கமின்றி...அவளது காதையும், மூக்கையும் அறுத்திருக்கிறான் அந்தக் கயவன்...இந்த காலத்திலும் இப்படியா? என்ற கேள்வியை விட...நாம் எவ்வளவு மோசமான கால கட்டத்தில் வாழ்கிறோம் என்ற பயமே அதிகம் வருகிறது.

முகத்தில் ஒரு முகப்பரு வந்தாலே நம்மால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை...அது சரியாகும் வரை தவித்துவிடுகிறோம்...முகத்தில் மூக்கும் இல்லை காதும் இல்லை என்றால்...எப்படி இருக்கும்...நினைத்தாலே நடுங்குகிறது... பெண்களை கில்லுக்கீரையாக கருதும் இந்தக் கயவர்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

அந்தப் பெண்ணுக்கு 18 வயதே பூர்த்தியாகி இருக்கிறது..இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் முடிந்துவிட்டன. காதையும் மூக்கையும் இழந்து தவிக்கும் ஆயிஷா எப்படியும் தனக்கு ஆபரேசன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். தொட்டதெற்கெல்லாம் தற்கொலைக்கு முயலும் சிலரிடம் இவரது கதையைச் சொன்னால்..அவர்களுக்கு அந்த எண்ணம் இனி எழுமா?

இப்போது ஆபரேசனுக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் ஆயிஷா பூரண குணம் பெற பிரார்த்திப்போம்.....எந்த கொடுமைக்கும் இறுதியில் நம்மால் செய்ய முடிவது இது மட்டும்தான் இல்லையா..

3 comments:

  1. .எந்த கொடுமைக்கும் இறுதியில் நம்மால் செய்ய முடிவது இது மட்டும்தான் இல்லையா..
    இல்லை தோழா நாமெல்லாம் ஒன்றினைன்ந்தால் பிரார்த்தனையை விட செய்யவேண்டிய வேலை ஏராளமாக இருக்கு அப்படி செய்யும் பொழுது இது போன்ற கயமைத்தனங்களை வேரறுக்க முடியும்

    ReplyDelete
  2. அந்தப் படத்தைப் பார்க்க என்னவோ போலிருக்கிறது. இனி எல்லாம் அவளுக்கு நன்மையாக அமையட்டும்.

    ReplyDelete
  3. ஆமாம் மகேஷ் அந்த படத்தை சேக்க வேணாம்னுதா முதல்ல நினைச்சேன்...ஆனா அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..சரியா உணரப்படனும்னா அது அவசியம்னு தோணுச்சு...அதான் போட்டேன்...

    ReplyDelete