Sunday, September 5, 2010

இருமண விழா அமைப்பிதழ்..

அன்புடைய வலைத்தமிழ் மக்களே....
 
எங்கள் மணவிழா

திருமண நாளில்

தங்கள் வாழ்த்துச்

சாரலில் நனைய

தங்கள் இனிய

வருகையை மகிழ்வுடன்

விரும்பும்
ரமேஷ் - நித்யா.

மொய் நோட்டு

Thursday, September 2, 2010

இதோ வருகிறான் இறைவன்...


என் படைப்பில் நீ
அதிசயமானவன்
என்றான் இறைவன்!!

ஏன் என்றேன்...

நீ நடந்தால் உன்னோடு
இரு நிழல்கள்
வருகின்றனவே!
என்றான் அவன்.

இல்லை இறைவா
உன் படைப்பில்
என்னவள்தான் அதிசயம்
என்றேன் நான்!

ஏன் என்றான்...

நிஜமாய் அவள்
அங்கிருக்க..
அவள் நிழல்
எப்போதும் என்னைச்
சுற்றுகின்றதே!!!
என்றேன்....

இதோ வருகிறான்
இறைவன் உனைக்கான
ஆவலுடன்!!!


பிரியமுடன் 
ரமேஷ் K