டிஸ்கி 1: நான் ரொம்ப சீரியசாவே எழுதறேன்னு... காமெடியா ட்ரை பண்ணுங்களேன்னு பதிவர் செல்வா கேட்டிருந்தார். அவருக்காக எழுதப்பட்ட சிரியஸ் பதிவு இது. இதுல சம்பந்தப்பட்ட பதிவர்கள் இதை சீரியஸா எடுத்துக்காதீங்க.. ஜஸ்ட் ஃபார் ஃபன்னுக்காக எழுதப்பட்ட பதிவுதான் இது...
டிஸ்கி 2: நம்ம ரமேஷ்- ரொம்ப நல்லவன் (சத்தியமா) எழுதியிருந்த "பதிவர் மாப்பிள்ளை ஓகே வா?" என்ற பதிவோட தொடர்பதிவு இது.
டிஸ்கி 3: பங்கு பெற்ற பதிவர்கள்
பதிவர் -
ரமேஷ்- ரொம்ப நல்லவன் (சத்தியமா) (சிரிப்பு போலீஸ்)ஈரோட்டுக்காரர் -
ப.செல்வக்குமார் (கோமாளி.!)துபாய்காரர் -
தேவா (Warrior)அக்கா -
கொஞ்சம் வெட்டிப் பேச்சு சித்ரா.ஐயாம் இன்டர்நேசனல் -
பன்னிக்குட்டி ராம்சாமி.மொரீஷியஸ் காரர் -
சூரியனின் வலை வாசல் அருண் பிரசாத்.பெங்களூர் காரர் -
பதிவுலகில் பாபுஅந்தப் பெண் பதிவர் (மணப்பெண்) - சிரிப்பு போலீஸ்கிட்ட கேட்டுக்கங்க..
------------------------------------------------------------------------------------------------------
மணப்பெண் மயங்கி சரிகிறார்..
சிறிது நாட்கள் கழித்து......
வேறு மணப்பெண் ஓகே ஆகி திருமணமும் முடிந்துவிடுகிறது. பதிவரின் திருமணத்தை முன்னிட்டு உலகிலேயே முதல் முறையாக வலைத்தளத்திலேயே வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதுக்கு யார் யாரெல்லாம் வந்தாங்க அங்க நடந்த சுவையான சம்பவங்களைக் கொஞ்சம் பார்ப்போம் வாங்க.....
"ஐ நான் தான் முதல்ல வடை எனக்கே" - ஈரோட்டுக்காரர்.
"தம்பி பதறாதப்பா வந்த எல்லாருக்குமே விருந்துல வடை தருவாங்கப்பா. உன் வலைப்பதிவுக்கு பொருத்தமான பேர்தாம்பா வெச்சிருக்க. அப்படியே இருக்கு உன் செயல்பாடு."
அய்யய்யோ தப்பா டைப் பண்ணிட்டேன்.. இருங்க மறுபடியும் சரியா டைப் பண்ரேன் என்றவாறே...
"தம்பி பதறாதப்பா வந்த எல்லாருக்குமே விருந்துல வடை தருவாங்கப்பா. உன் வலைப்பதிவுக்கு பொருத்தமான பேர்தாம்பா வெச்சிருக்க. அப்படியே இருக்கு உன் செயல்பாடு...!" - துபாய்காரர்.
(என்ன வேறுபாடுன்னு முழிக்காதிங்க நல்லா பாருங்க.. வித்தியாசம் புரியும்...!)
"அப்படியான்னே சரிங்கன்னே.." - ஈ.கா
"இவன் ஜெயிக்கப் பிறந்தவன்...!" - து.கா
"யார்னே... அங்க யாருமே இல்லை.. யாரண்ணே சொல்றீங்க" - ஈ.கா
"தம்பி உனக்குப் புரியலைங்கறதுக்காக என் மனக்கங்குகளில் உதிக்கும் எண்ணங்களை நான்...! வெளிப்படுத்தாம இருக்க முடியுமா...!" - து.கா
"//உனக்குப் புரியலைங்கறதுக்காக என் மனக்கங்குகளில் உதிக்கும் எண்ணங்களை நான்..! வெளிப்படுத்தாம இருக்க முடியுமா...! -
:-)" - இவங்க அமெரிக்காக் காரங்க. (இவங்களை மட்டும் இனிமே அ.கா என்பதற்கு பதிலாக அக்கா என்று அன்புடன் அழைப்போம்)
ஈ.கா மிகவும் குழம்பிவிட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நைசாக மேட்டரை மாற்றுகிறார்.
"நானும் உங்க ஸ்டைல்ல எழுதறேன்னு சொல்லிட்டேன். ஆனா எழுதவே முடியலேண்ணே. மக்கள் மத்தியில வேற சொல்லிட்டேன். இப்ப என்ன பண்றதுன்னே தெரியலேண்ணே." - ஈ.கா
"தம்பி எதுனால உன்னால எழுத முடியலைன்னு எனக்கு தெரியும்பா...!" - து.கா
"அண்ணே.. அண்ணே சொல்லுங்கன்னே." - ஈ.கா
"தம்பி உன்னோட வலைப்பதிவுல அதோட பேரை எழுதிருக்க இல்லியா. அதுல பாரு. ஒரே ஒரு புள்ளியும் ஒரே ஒரு ஆச்சரியக் குறியும்தான் வெச்சிருப்ப. அந்த இடத்துல இன்னும் ரெண்டு புள்ளி வை. உன்னால தானா என்ன மாதிரி எழுத வரும்பா..!" - து.கா.
"அண்ணன்னா அண்ணன்தான் சூப்பர்ணே. இப்பவே ரெண்டு புள்ளி எக்ஸ்ட்ராவா வெச்சிடறேன்." என்றவாரே மனதிற்குள்...
("என்ன இது இவரு மாதிரி நம்ம எழுதலாம்னு பார்த்தா நம்மள மாதிரி இவரு மொக்கை போட ஆரம்பிச்சிட்டாறே") - ஈ.கா
"//அதுல பாரு. ஒரே ஒரு புள்ளியும் ஒரே ஒரு ஆச்சரியக் குறியும்தான் வெச்சிருப்ப.
:-)" - அக்கா.
"//அண்ணன்னா அண்ணன்தான் சூப்பர்ணே. இப்பவே ஒரு புள்ளி எக்ஸ்ட்ராவா வெச்சிடறேன்.
:-)" - அக்கா.
நம்ம கல்யாண விருந்துக்கு வந்துட்டு அதைப் பத்தி யாருமே பேசலையே அப்படின்னு அவரோட வலைப் பதிவுக்கு அவரு போட்டுருக்கற காப்சனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கராரு பதிவர். பின் அருகில் இருக்கும் இன்னொரு பதிவரிடம் தனது வருத்தத்தச் சொல்கிறார். உடனே அவர்....
"ங்கொய்யால.. நாங்க எதுக்கு வந்திருக்கம்னு நினைக்கற நீயி. சோறு தின்னுட்டு உன்ன வாழ்த்தாம. பொடக்காலி வழியா ஓடி போயிடுவோம்னு நினைச்சியா நாயே.. நாயே. எனக்காக நூத்துக்கணக்குல ஒட்டகங்கள் ஆ காட்டிக்கிட்டு லைன் கட்டி நிக்குதுங்க. அதுக்கு பல்லு விளக்கற வேலையையும் கூட விட்டுப்புட்டு உன்ன வாழ்த்தறதுக்காக வந்தா என்ன பேச்சு பேசற படுவா.. என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு! " - ஐயாம் இன்டர்நேசனல்.
இவருகிட்ட போயி நம்ம வருத்தத்தை சொல்லித் தொலைச்சிட்டமே என்று வருந்தியவாறே மீண்டும் அவரோட வலைப்பதிவோட காப்சனை எடுத்துப் பார்த்துக் கொள்கிறார் அந்தப் பதிவர்.
"//உன்ன வாழ்த்தாம. பொடக்காலி வழியா ஓடி போயிடுவோம்னு நினைச்சியா நாயே.. நாயே. -
Nice" - அக்கா.
"அதுசரி.. நான் தான் உனக்கு எச்சரிக்கை பண்ணி படத்தோட விளக்கி ஒரு பதிவு போட்டனே அதை நீ படிக்கவே இல்லையா. படிக்காமயே பின்னூட்டம் போட்டதுனால இப்ப உன் வாழ்க்கையே வீனாப் போச்சேடா" - ஐ.இ
"இல்ல இல்ல பின்னூட்டம் போட்டுட்டு அப்புறம் படிச்சேன்.. நானும் எத்தனை பொண்ணுங்களைதான் ICUவுக்கு அனுப்பறது." - பதிவர்.
"//நானும் எத்தனை பொண்ணுங்களைதான் ICUவுக்கு அனுப்பறது.-
Touching." - அக்கா.
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" - ஈ.கா
து.கா பதிவரிடம் திரும்பி...
"தம்பி கவலைப்படாதே. உனக்காக
மூன்று முடிச்சு...! என்று ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். அது உன் கவலைகளுக்கு மருந்தாக அமையும் தம்பி...!" - து.கா
பதிவர் என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்கிறார். யாரையோ பார்த்து சல்யூட் அடித்துச் சிரிக்கிறார். பின் ச்சீ. சல்யூட் இல்லை. வெறும் சிரிப்புதான் என்று திருத்திக் கொள்கிறார்.
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" - ஈ.கா
திடீரென ஒருவர் என்ன நம்மல யாருமே கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே இதுக்குதான் பாராசூட்ல வந்து இறங்கியிருக்கனும்னு மனதிற்குள் நினைத்தவாறே நான் தாங்கோ.. நான் தாங்கோ.. நான் தாங்கோ.. என்று சொல்லிக்கொண்டே என்ட்ரி கொடுக்கிறார்..
"ஆமாம் இவரு அப்படியே ரஜினிகாந்து.. இங்க இருக்கவங்கல்லாம் அம்பிகா இவரு நான் தான்னு சொன்னவுடனே... ஃபிரிட்ஜ் கதவைத் தொறந்து பாத்து டூயட் பாடப்போறாங்க. யாருங்க நீங்க சொல்லுங்க" - அனானி.
"ஏய் இது சுட்டெறிக்கும் சூரியனோட வாசப்படி. இங்க வந்து யார்ரா அது ஃபிரிட்ஜ பத்தி பேசி காமெடி பண்றது" - மொரீஷியஸ் காரர்.
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" - ஈ.கா
"//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் -
?????" - அக்கா
"//சுட்டெறிக்கும் சூரியனோட வாசப்படி.
Ha ha ha :-)" - அக்கா.
இவங்க வேற நேரம் தெரியாம கரெக்டா முக்கியமான பாயிண்ட எடுத்துப் போட்டு சிரிச்சி காமெடி பண்றாங்களே அப்படின்னு மனசுக்குள் நினைத்தாலும்.
"ஓ நீங்களும் வந்திருக்கீங்களா.. வாங்க வாங்க. என்ன அடுத்த பயணக் கட்டுரை எழுதறதுக்காக வந்திருக்கீங்களா.. நானும் உங்களுக்கு போட்டியா ஆகாயத்துல இருந்து கடல்ல குதிச்சு ஒரு பயணக் கட்டுரை எழுதி படங்களோட போட்டேன். பாத்தீங்களா." - மொ.கா
இவங்களுக்கு அர்த்தம் புரியாதவங்ககிட்ட பேச்சுக்கொடுத்துதான இவங்க பயணக் கட்டுரை எழுதுவாங்க. தமிழ் மட்டுமே பேசத்தெரிஞ்சவங்க இருக்கற இங்க என்ன பன்னுவாங்க என்று மனதிற்குள் நினைத்த மொ.கா. அவருக்கு அருகில் து.கா அமர்ந்திருப்பதைப் பார்த்தவுடன் சமாதானமாகிறார்.
"என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. அவங்க பாக்காத தமிழ் பதிவுன்னு ஒன்னு இந்த உலகத்துல இருக்கா. உங்களுக்கு இங்கிலீஸ்ல பாராட்டி பின்னூட்டம் எழுதியிருந்தாங்களே. படிக்கலையா." - பெங்களூர் காரர்.
"//அவங்க பாக்காத தமிழ் பதிவுன்னு ஒன்னு இந்த உலகத்துல இருக்கா.
:-D" - அக்கா.
மொ.காவைப் பார்த்த பதிவர் உற்சாகமாக..
"வாங்க வாங்க உங்களைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்" - பதிவர்
"எதுக்கு சமையல் குறிப்பு கேக்கறதுக்கா" - ஐ.இ
பதிவர் அவரை முறைக்கிறார்.
"அது எங்களுக்கு உள்ள அண்டர்ஸ்டேண்டிங்.. நாங்கள்லாம் நண்பேண்டா" - மொ.கா.
"யாரைப்பாத்து டான்னு கூப்பிட்ட ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!" - ஐ.இ.
"என்னங்க இப்படி கோபப்படறீங்க.. எனக்கு கோவம் வந்தா நான் என்ன பன்னுவேன் தெரியுமில்ல" - மொ.கா.
"ஏன் தெரியாம... 'டீ' போடுவீங்க." - என்று மண்டபத்தில் குழுமியிருந்த அனைவரும் கோரசாக கத்துகின்றனர்.
அதைக்கேட்டு அதிர்ந்த மொ.கா அமைதியாகிறார்.
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" - ஈ.கா.
"எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இங்க என்னய்யா நடக்குது? ஒன்னுமே புரியலை." - புதிய பதிவர்.
"கல்யாண ரிசப்சன் நடக்குதுங்க.. புரியலியா?" - ஈ.கா.
என்ன இவன் இப்படி மொக்கை போடறானே என்று அதிர்ந்த புதிய பதிவர் பின் அமைதியாகிறார். பின் மீண்டும் ஈ.கா....
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்"
"தம்பி அந்த உண்மையதான் நான் உனக்கு ஏற்கனவே சொல்லிட்டனே. நீ இன்னும் அந்த ரெண்டு புள்ளிய வைக்கலையா.. திரும்பத் திரும்ப இதையே கேட்டுக்கிட்டு இருக்க...!" - து.கா
ஆ.. என அதிர்ந்தவாறே...
"அட அதில்லண்ணே.. அத்தனை பொண்ணுங்க மயங்கி விழுந்து ICU வரைக்கும் போச்சுங்களே.. ஆனா அண்ணி மட்டும் எப்படி இந்தப் பதிவர தைரியமா கட்டிக்கிட்டாங்க"
இதை கவனித்த பதிவர் மீண்டும் ஒருமுறை அவரது வலைப்பதிவின் கேப்சனைப் பார்த்துக் கொள்கிறார்.
ங்கொக்க மக்கா இவன் ஏன் அடிக்கடி அவனோட பிளாக்க தொறந்த தொறந்து பார்த்துக்கிட்டே இருக்கான்..சரி கண்டுபிடிப்போம்.. ஏய் நீ யாரு எப்பேர் பட்டவன்னு எங்களுக்கு தெரியும் இருடீ இன்னிக்கி மாட்னடீ என்று மனதிற்குள் நினைத்தவாறே சென்று பார்க்கிறார் ஐ.இ.
அங்கே அவருடைய வலைப்பதிவின் காப்சனாக "என்னத்தை சொல்றது" என்று எழுதியிருந்தது. இதைத்தான் இவரு இவ்வளவு நேரம் சஸ்பென்சா பாத்துக்கிட்டு இருந்தாரா அடச்சே என்று நினைத்துக்கொள்கிறார் மனதிற்குள்.
"அட அதில்லண்ணே.. அத்தனை பொண்ணுங்க மயங்கி விழுந்து ICU வரைக்கும் போச்சுங்களே.. ஆனா அண்ணி மட்டும் எப்படி இந்தப் பதிவர தைரியமா கட்டிக்கிட்டாங்க
Rightu :-)" - அக்கா.
மற்றவர்கள் அனைவரும் ஈ.கா சொல்வதில் உள்ள உண்மை உணர்ந்து அதை ஆச்சரியத்துடன் ஆராய முற்பட்டனர்.
அனைவரும் ஒன்றாகப் பேசி அந்த மணப்பெண்ணிடம் பேசுவதற்கு அக்காவை அனுப்பலாம் என முடிவாயிற்று. நானா நோ நோ.. என்று மறுத்த அவர் பின் அந்த இரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சம்மதித்தார். கொஞ்ச நேரம் மணப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தவர்.
அனைவரையும் பார்த்து...
"ஏன்னா அந்தப் பொண்ணும் ஒரு பதிவராம்" என்றார்.
இப்போது நம்ம பதிவர் மயங்கி விழுகிறார்.